ADDED : பிப் 22, 2025 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு ஆரம்ப பள்ளியில் நேற்று காலை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
இப்பள்ளியில் 168 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆங்கில திறன் பயிற்சி வகுப்புகளில் மாணவர்களின் கல்வி திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, சில மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார். மாணவர்களுக்கு, கல்வி திறனை வளர்க்குமாறு ஆசிரியர்களிடமும், விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என, மாணவர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
பள்ளியில், மாணவர்களுக்கான அடிப்படை வசதியான கழிவறை, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா எனவும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

