/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கருணாநிதி நுாற்றாண்டு பேச்சு போட்டியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
/
கருணாநிதி நுாற்றாண்டு பேச்சு போட்டியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
கருணாநிதி நுாற்றாண்டு பேச்சு போட்டியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
கருணாநிதி நுாற்றாண்டு பேச்சு போட்டியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 27, 2024 05:11 AM

புதுச்சேரி : புதுச்சேரி தி.மு.க., இளைஞர் அணி சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு பேச்சுப் போட்டி புஸ்சி வீதி ரோஷ்மா திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.
சம்பத், எம்.எல்.ஏ., வரவேற்றார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார். மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
இதில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பயிலும் 300 மாணவர்கள் போட்டில் பங்கேற்றனர்.
மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரபு, செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, பத்மபிரியா, கந்திலி கரிகாலன், பிரகதீஸ்வரன், அருள்எழிலன், ஆடுதுரை உத்ராபதி நடுவர்களாக பணியாற்றினர்.
இப்போட்டியில் பங்கேற்ற முதல் 22 மாணவர்களுக்கு இளைஞர் அணி சார்பில், ரூ. 10 ஆயிரம் பணமுடிப்பு, சான்றிதழ், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, சண்குமரவேல், லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், பிரபாகரன், தங்கவேலு, செந்தில்குமார், அமுதாகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நித்திஷ், முகிலன், தாமரைக்கண்ணன், ரெமிஎட்வின், உத்தமன், கிருபாசங்கர், அகிலன், சந்துரு, தமிழ்ப்பிரியன், பஜிலுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.