/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டணத்தை குறைக்க இந்திய கம்யூ., வலியுறுத்தல்
/
மின் கட்டணத்தை குறைக்க இந்திய கம்யூ., வலியுறுத்தல்
மின் கட்டணத்தை குறைக்க இந்திய கம்யூ., வலியுறுத்தல்
மின் கட்டணத்தை குறைக்க இந்திய கம்யூ., வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2024 07:50 AM

புதுச்சேரி, மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் கோரிக்கை வைத்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு உயர்த்திய மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, இந்தியா கூட்டணி சார்பில், தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தினை தொடர்ந்து மின்துறை அமைச்சர் வீட்டு உபயோகிப்பவர்களில் 1 லிருந்து 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு மட்டும் மானியம் வழங்கப்படும் என, அறிவித்திருக்கிறார். இதனை உபயோகிப்பவர்களில் உள்ள அனைத்து ஸ்லாப்களின் கட்டணங்களில் முதல் இரண்டு ஸ்லாப்கள் 200 யூனிட் வரை இருக்கிறது. 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டுகள் மற்றும் 300 யூனிட்டிலிருந்து அதற்கு மேல் இருக்கிறது. இரண்டு ஸ்லாப்களில் உள்ளவர்களுக்கு 40 பைசா மானியம் என்பது யானை பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் தமிழ்நாட்டை ஒப்பீடு செய்கிறார்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி உட்பட 13 அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. மது அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்கப்படுகிறது. அதேபோல புதுச்சேரியில் ஏன் இல்லை. இதற்கு அவர், பதில் சொல்வாரா. எனவே அனைத்து ஸ்லாப்களில் உள்ள மின் பயன்படுத்துவோருக்கும் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.