/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வணிக வரி உதவி ஆணையருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
/
வணிக வரி உதவி ஆணையருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : ஜூன் 01, 2024 04:18 AM

புதுச்சேரி : ஓய்வு பெற்ற வணிக வரி உதவி ஆணையர் புகழேந்திக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி வணிக வரி துறை உதவி ஆணையர் புகழேந்தி மற்றும், பல்நோக்கு ஊழியர் ஜெயராட்சகன் ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர்.இவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா துறை வளாகத்தில் நேற்று நடந்தது.
வணிக வரித் துறை ஆணையர் முகமது மன்சூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணி ஓய்வு பெற்ற வணிக வரி துறை உதவி ஆணையர் புகழேந்தி, ஆணையர், பல்நோக்கு ஊழியர் ஜெயராட்சகன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கினார்.
வணிக வரித் துறை ஆணையர் முகமது மன்சூர் பேசுகையில், 'பணி ஓய்வு பெற்ற உதவி ஆணையர் புகழேந்தி, அரசு பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளதுடன், பொது சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்' என்றார்.
நிகழ்ச்சியில், மேல் முறையிட்டு உதவி ஆணையர் இளங்கோவன், உதவி ஆணையர் ரேவதி, வணிக வரி அதிகாரிகள் சரவணகுமார், தேவிராஜலட்சுமி, அஸ்மாபாய், ஜெயபாரதி, ரவிச்சந்திரன், காவிய வர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.