தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்


ADDED : ஆக 10, 2024 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவிலில், 64, வது ஆண்டு பிரம்மோற்சவம் விழா துவங்கியது.

இந்த கோவிலில், பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டிற்கான பிரம்மோற்சவம், கொடியேற்றுத்துடன் நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து கோவிலில் விக்னேஸ்வர பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று சுவாமியின் வெள்ளி மூஷிக வாகன வீதி உலா நடக்கிறது. இதையடுத்து நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் நடக்க உள்ளன.

வரும் 18ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும், அடுத்த நாள், 19ம் தேதி நர்த்தன கணபதி தேரடி உற்சவம் மற்றும் பவுர்ணமி கடல் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. வரும் 19ம் தேதி சங்காபிேஷகத்தோடு, பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

மணக்குள விநாயகர் கோவிலில்பிரம்மோற்சவ விழாவில் நாள்தோறும் பள்ளி மாணவ -மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. இதில் இசை, நாட்டியத்தில் மாணவர்கள் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன், அர்ச்சகர்கள் கணேஷ் சிவாச்சார்யார், சீனிவாச குருக்கள், நாகராஜன் சிவாச்சார்யார் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us