/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பருவமழையை எதிர்கொள்ள ஆணையர் ஆலோசனை
/
பருவமழையை எதிர்கொள்ள ஆணையர் ஆலோசனை
ADDED : செப் 08, 2024 05:42 AM

புதுச்சேரி: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார்.
உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனா, இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சாலைகள் மற்றும் தெருக்களில் நீர் தேங்காத வகையில், வடிநீர் வாய்க்கால்களை துார் வாருதல், தெருக்களில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தல், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மழை நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மேல்நிலை தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். மின்சாரம் தடைப்படும் நேரங்களில், உடனே குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என ஊழியர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.