/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரி பாக்கி உடனே செலுத்த ஆணையர் அறிவுறுத்தல்
/
வரி பாக்கி உடனே செலுத்த ஆணையர் அறிவுறுத்தல்
ADDED : மே 29, 2024 05:18 AM
புதுச்சேரி : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் குடிநீர், வீடு மற்றும் தொழில் வரி செலுத்தாதவர்கள் உடனடியாக அலுவலகத்தில் வரி பாக்கியை செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்குமாறு ஆணையர் எழில்ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 42 கிராமங்களின் பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர், வீடு, தொழில் வரி மற்றும் தொழிற்சாலை, வணிக உரிமம் கட்டணங்களை இன்று (29ம் தேதி) முதல் 15 தினங்களுக்குள் கொம்யூன் அலுவலக வருவாய் பிரிவில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதிகப்படியான வரி பாக்கி செலுத்தாத நபர்கள் பற்றிய விவரப் பட்டியல் தயார் செய்து, பொது இடத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வரி செலுத்தாத நபர்கள் மீது கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் வரிப் பாக்கி வைத்துள்ள நபர்களின் இணைப்பு மற்றும் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட இணைப்புகளும் துண்டிப்பு செய்யப்படும்.
துண்டிப்பு செய்யப்பட்ட இணைப்புகள் அலுவலக உத்தரவு இன்றி எடுத்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்தால் போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்தவர்கள் வரிபாக்கி பற்றிய விவரங்களை பில் கலெக்டர்கள் பழனி- 9600432456, வெங்கடேசன்- 9751532796 ஆகியோரிடமும், திருபுவனை தொகுதிக்கு உட்பட்டவர்கள் பச்சையப்பன்- 9585110497, சீத்தாபதி- 9443626407 ஆகியோரிடமும் தகவல்களைப் பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து வருவாய் பிரிவில் அலுவலக நேரங்களில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.