/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு; ஏ.ஐ.சி.சி.டி.யூ., கோரிக்கை
/
தொழிலாளர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு; ஏ.ஐ.சி.சி.டி.யூ., கோரிக்கை
தொழிலாளர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு; ஏ.ஐ.சி.சி.டி.யூ., கோரிக்கை
தொழிலாளர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு; ஏ.ஐ.சி.சி.டி.யூ., கோரிக்கை
ADDED : ஏப் 02, 2024 03:51 AM
புதுச்சேரி : 'சுவர் இடிந்த விபத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, ஏ.ஐ.சி.சி.டி.யூ., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேங்காய்த்திட்டு வாய்க்கால் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. தொழிலாளர்களுக்கு பணியிட பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி அரசு நேரடியாக பொறுப்பேற்று, மரணம் அடைந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் மற்றும் உயிருக்கு போராடும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.