நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்து அபாயம்
தேங்காய்த்திட்டு, வசந்தம் நகர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாமல் இருப்பதால், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.
சுப்ரமணி, தேங்காய்த்திட்டு.
கழிவுநீர் தேக்கம்
பாக்கமுடையான்பட்டு, ஏர்போர்ட் ரோடு, வன்னியர் தெருவில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு.
எரியாத விளக்குகள்
பிள்ளையார்குப்பம் மெயின் ரோடு மாரியம்மன் கோவில் தெருவில் மின் விளக்குகள் எரியாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.
முருகன், பிள்ளையார்குப்பம்.
வாகன ஓட்டிகள் அவதி
கோனேரிக்குப்பத்தில் இருந்து சேந்தநத்தம் ரோடு, மிகவும் மேசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரவி, கோனேரிக்குப்பம்.

