நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு சக்கர வாகனத்தால் இடையூறு
லாஸ்பேட்டை சாலை அரங்கநாதன் நடுநிலைப்பள்ளி அருகே இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.
கலை,லாஸ்பேட்டை.
குடிநீர் வீணாகும் அவலம்
சாரம் அண்ணாமலை நகர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பைப் உடைந்து தண்ணீர் சாலையில் செல்கிறது.
துரைராஜா,சாரம்.
நாய் தொல்லை
நோணாங்குப்பம், புது நகரில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால் நடந்து செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
தேவகி,நோணாங்குப்பம்.
சாலையில் ஓடும் கழிவுநீர்
கொம்பாக்கம் சோனியாகாந்தி நகரில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது.
ரமேஷ்,கொம்பாக்கம்.
போக்குவரத்திற்கு இடையூறு
வில்லியனுார், மூலக்கடையில் இருந்து ஏழை மாரியம்மன் கோவில் வரை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூராக உள்ளது.
ரஜினி முருகன்,வில்லியனுார்.

