நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயணியர் நிழற்குடை தேவை
பத்துக்கண்ணு சாலையில் இருந்து சேதராப்பட்டு வரை பயணிகள் நிற்குடை இல்லாமல் பயணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது.
திருமால்,கரசூர்.
குப்பை அள்ளப்படுமா?
கருவடிக்குப்பம் மேட்டுத்தெருவில், குப்பைகளை அள்ளாமல் சாலையில் சிதறி கிடந்து வருகிறது.
தனபால், கருவடிக்குப்பம்.
மின் விளக்கு எரியுமா?
தொண்டாமநத்தம் முதல் சேதராப்பட்டு வரை சாலையில் மின் விளக்குகள் எரியாமல், இரவில் அப்பகுதிகள் இருண்டு கிடக்கிறது.
கலியமூர்த்தி, புதுச்சேரி.
மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு
வில்லியனுார் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது.
சக்தி,வில்லியனுார்.

