நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ைஹமாஸ் விளக்கு எரியவில்லை
தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலைதெப்பக்குளம் அருகே பல மாதங்களாக ைஹமாஸ் விளக்கு எரியாமல் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
பாரதி, தவளக்குப்பம்.
நாய்கள் தொல்லை
நுாறடி சாலை ஜெயம் நகரில், நாய்கள் துரத்தி வருவதால், பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர்.
மணிகண்டன், புதுச்சேரி.
நிழற்குடை இல்லாமல் அவதி
தவளக்குப்பம் பஸ் நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாமல் இருப்பதால், மக்கள் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர்.
சரவணன், தவளக்குப்பம்.
ஏர் ஹாரனால் அவதி
தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் தொடர்ந்து அடிப்பதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சுரேஷ், அரியாங்குப்பம்.