ஹைமாஸ் விளக்கு பழுது
தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலைதெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
கண்ணன், தவளக்குப்பம்.
கழிவுநீர் தேக்கம்
நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர்கிழக்கு வீதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுகழிவுநீர் தேங்கி நிற்கிறது.
மணி, நைனார்மண்டபம்.
மின் விளக்கு எரியவில்லை
முருங்கப்பாக்கம் சுதானா நகரில், பல இடங்களில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
மதி, முருங்கப்பாக்கம்.
ஆக்கிரமிப்பால் இடையூறு
அரியாங்குப்பம் ஆர்.கே., நகரில் ஆக்கிரமிப்புஅதிகமாக உள்ளதால், வாகனங்கள் செல்லமுடியாமல் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மகேஷ், அரியாங்குப்பம்.
காலி மனைகளால் இடையூறு
சொக்கநாதன்பேட்டை ராமலிங்கம் நகர் மெயின் ரோடு, 4வது கிராஸ் பகுதியில் உள்ள காலிமனைகளில் புதர் மண்டி கிடப்பதால், விஷ பூச்சுகள் அதிகமாக நடமாட்டம் உள்ளது.
விநாயகர், சொக்கநாதன்பேட்டை.