: மின் விளக்கு எரியவில்லை: அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. முருகன், அரியாங்குப்பம்.
––––––––––––––––––––––––––––––––––
குண்டும்: மேட்டுப்பாளையம் – மூலக்குளம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கர்ணன், புதுச்சேரி.
–––––––––––––––––––––––––––––––––––––––––
போக்குவரத்து இடையூறு : மரப்பாலம் சந்திப்பில், வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. லோகேஷ், மரப்பாலம்.
––––––––––––––––––––––––––––––––––––––––––––––––
மண் குவியல்: கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலையில் மண் குவியல்கள் உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மாறன், புதுச்சேரி.
–––––––––––––––––––––––––––––––––––––––
டவுன் பஸ் தேவை: தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தினேஷ், தேங்காய்த்திட்டு.
–––––––––––––––––––––––––––––

