UPDATED : மே 25, 2026 06:18 PM
ADDED : மே 25, 2026 06:01 PM
மூலக்குளத்தில் சிக்னல் விளக்கு எரியாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வேலன், மூலக்குளம்.
தெரு விளக்கு எரியாமல் உள்ளது: மூலக்குளம் மோதிலால் நகர் 3வது மெயின் ரோட்டில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
அருண், புதுச்சேரி.
குண்டும் குழியுமாக சாலை: காராமணிக்குப்பம் ரயில்வே கிராசிங் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாரதிதாசன், காராமணிக்குப்பம்.
வாய்க்கால் துார்வார வேண்டும்: தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், துார் வாரவேண்டும்.
ராஜகுமாரி, தொண்டமாநத்தம்.
போக்குவரத்து நெரிசல்: மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மகேஷ், மரப்பாலம்.
