தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மே 29, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 கலங்கலான குடிநீர்

அரியாங்குப்பம், ஸ்ரீராம் நகரில் குடிநீர் கலங்கலாக வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சூர்யா, அரியாங்குப்பம். 

போக்குவரத்து இடையூறு

அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் வாகனங்களை  சாலையிலேயே நிறுத்தி செல்வதால்  போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

மணிமாறன், வீராம்பட்டினம். 

ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் – காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மோகன்ராஜ், புதுச்சேரி.

மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை கடைகளுக்கு முன் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. 

மாறன், மரப்பாலம். 

நாய்கள் தொல்லை

புதுச்சேரி கடற்கரை சாலையில் தெரு நாய்கள் தொல்லையால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

ராஜேஷ், புதுச்சேரி. 

சாலை படுமோசம்

காராமணிக்குப்பம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மாணிக்கம், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us