ADDED : ஜூன் 08, 2026 07:11 PM
: சாலை குண்டும்: முத்தியால்பேட்டை செந்தாமரை நகர், ராஜிவ்காந்தி வீதியில் தோண்டப்பட்ட சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மோனீஷ், முத்தியால்பேட்டை.
––––––––––––––––––––––––––––––––––––––––––––
மணிக்கூண்டு செயல்படவில்லை
முத்தியால்பேட்டை மணிகூண்டு பல மாதங்களாக செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
ஹரிநாத், புதுச்சேரி.
–––––––––––––––––––––––––––––––––––––––––
தெரு நாய்கள் தொல்லை: லாஸ்பேட்டை ஆனந்தா நகரில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிவயடைந்து வருகின்றனர்.
மோகன், லாஸ்பேட்டை.
–––––––––––––––––––––––––––––––––––––––––
குறைந்த மின்னழுத்தம்: நெல்லித்தோப்பு சத்யா நகர் கிழக்கு 3வது குறுக்கு தெருவில் குறைந்த மின்னழுத்தம் வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கார்த்திகேயன்,நெல்லித்தோப்பு.
–––––––––––––––––––––––––––––––––––––
சாலையில் மண் குவியல்: திருக்கனுார், வழுதாவூர் ரோட்டில் இருபுறத்திலும் மண் குவியல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
நாகராஜன், புதுச்சேரி.
