ADDED : ஜூன் 12, 2026 05:23 PM
சென்டர் மீடியனில் குப்பை
மரங்களில் இருந்து விழும் இலைகள், சென்டர் மீடியனில் குப்பைகளாக தேங்கி உள்ளதால் அகற்ற வேண்டும்.
கமலேஷ், புதுச்சேரி.
சுகாதாரசீர்கேடு
முதலியார்பேட்டை, வன்னியபெருமாள் கோவில் வீதி, மீன் மார்க்கெட் அருகில் சாலையில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ஹரிராஜன், முதலியார்பேட்டை.
சாலை படு மோசம்
மொரட்டாண்டி ராஜ ராஜேஸ்வரி கோவில் செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அதிப்பட்டு வருகின்றனர்.
புவனேஷ், முதலியார்பேட்டை.
தெரு நாய்கள் தொல்லை
முதலியார்பேட்டை, வன்னிய பெருமாள் கோவில் வீதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
காந்தி, முதலியார்பேட்டை.
போக்குவரத்து நெரிசல்
ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் – காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மோகன், புதுச்சேரி.
இரவில் டவுன் பஸ் தேவை
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கணேசன், புதுச்சேரி.
குப்பை வண்டி வருமா?
தேங்காய்த்திட்டு மேட்டுத்தெருவில் குப்பை வண்டிசரியாக வராமல் உள்ளதால் குப்பைகள் தேங்கியுள்ளது.
கலைவாணி, தேங்காய்திட்டு.
