ADDED : ஜூன் 23, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
தெரு விளக்கு எரியுமா?
புதுச்சேரி, சாரம் பாலாஜி நகர் மெயின் ரோட்டில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.
பாலாஜி, சாரம்.
சாலை படுமோசம்
அண்ணாசாலை – ரெயின்போ நகர் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கல்யாணம், புதுச்சேரி.
போக்குவரத்து நெரிசல்
காலாப்பட்டு, முருகன் கோவில் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் போலீசாரை நியமிக்க வேண்டும்.
பார்த்திபன், காலாப்பட்டு.
காலி மனையில் புதர்கள்
வில்லியனுார் கிருஷ்ணா நகரில் காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் உள்ளது.
தேவதாஸ், வில்லியனுார்.
