ADDED : ஜூலை 12, 2026 07:42 PM
குடிமகன்களால் அச்சம்
நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு பழைய பாலத்தில் இரவில் மது குடிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கவிச்செல்வன், நோணாங்குப்பம்.
போக்குவரத்து இடையூறு
மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
சத்தியா, மரப்பாலம்.
சாலையில் ஆக்கிரமிப்பு
திலாசுபேட்டை, சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தேன்மொழி, திலாசுபேட்டை.
போக்குவரத்து இடையூறு
அரும்பார்த்தபுரம் பைபாசில் பாலத்தின் கீழே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கண்ணன், அரும்பார்த்தபுரம்.
பஸ் வசதி தேவை
தேங்காய்த்திட்டு பகுதிக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செல்வம், நைனார்மண்டபம்.
தெரு நாய்கள் தொல்லை
பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
கவிதா, புதுச்சேரி.
