ADDED : ஜூலை 24, 2026 04:52 PM
விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
தவளகுப்பம் வி.ஐ.பி., நகர் காலிமனையில், புதர்மண்டி பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
பன்னீர்செல்வம், தவளகுப்பம்.
ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
வில்லியனுார் கிழக்கு மாடவீதியில், ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.
ராமநாதன், வில்லியனுார்.
பள்ளம் மூடப்படுமா?
பிருந்தாவனம் 3வது குறுக்குத் தெருவில் தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடாமல் உள்ளது.
வரதராஜன், பிருந்தாவனம்.
மரத்தில் உரசும் மின் கம்பி
பாக்கமுடையான்பட்டு, தாகூர் நகர் முதல் தெருவில் உயர்மின் அழுத்த கம்பி மரக்கிளையில் உரசி செல்கிறது.
சிவசுப்ரமணியம், பாக்கமுடையான்பட்டு.
தெரு விளக்கு எரியுமா?
மணவெளி, நேதாஜி நகர் 3வது குறுக்கு தெருவில் மின் விளக்கு எரியாமல் உள்ளது.
விஜயா, அரியாங்குப்பம்.
சாலை படுமோசம்
மொரட்டாண்டி கோவியிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
சித்ரா, புதுச்சேரி.
வில்லியனுாரில் இருந்து பெரம்பூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
லட்சுமி, வில்லியனுார்.
தெரு நாய்கள் தொல்லை
முதலியார்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மனோகர், முதலியார்பேட்டை.
குடிமகன்களால் மக்கள் அச்சம்
தட்டாஞ்சாவடியில் இருந்து கோரிமேடு செல்லும் சாலையில் மது குடிப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
குமார், தட்டாஞ்சாவடி.
