ADDED : ஜூலை 31, 2026 04:51 PM
சாலையில் மீன் கடைகள்
உப்பளம் சாலையில் 20க்கும் மேற்பட்ட மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர்.
ரமேஷ், உப்பளம்.
இ.சி.ஆர்., படுமோசம்
இ.சி.ஆர்., குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சந்தோஷ், புதுச்சேரி.
தெரு நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
பிரகாஷ், புதுச்சேரி.
குடிமகன்களால் மக்கள் அச்சம்
தட்டாஞ்சாவடி – கோரிமேடு சாலையில் குடிமகன்கள் மது குடிப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கண்ணப்பன், புதுச்சேரி.
போக்குவரத்து நெரிசல்
மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மாதவன், மரப்பாலம்.
குண்டும் குழியுமான சாலை
புதுச்சேரி கிருஷ்ணா நகர் மெயின் ரோடு சாலை படுமோசமான நிலையில் உள்ளது.
வினோத், புதுச்சேரி.
தாறுமாறாக நிற்கும் வாகனங்கள்
ராஜிவ் சிக்னலில், இ.சி.ஆர்., மார்க்கமாக செல்லும் வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால், கோரிமேடு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது.
மணிகண்டன், கோரிமேடு.
