சுகாதார சீர்கேடு
தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே குப்பை தொட்டியில் இருந்து குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சித்ரா, தவளக்குப்பம்.
----------------------------------------------------நிழற்குடை தேவை
முருங்கப்பாக்கம், பஸ் நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுரேஷ், முருங்கப்பாக்கம்.
-------------------------------------------------மதில் சுவர் கட்டப்படுமா
அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மதில் சுவர் இடிந்து பல மாதங்கள் ஆகியும் கட்டப்படாமல், உள்ளது.
முகேஷ், அரியாங்குப்பம்.
---------------------------------------------------சுற்றித்திரியும் பன்றிகள்
வில்லியனுார் பைபாஸ் சாலையில் திரியும் பன்றிகள் மீது வாகனங்கள் மோதி தினசரி விபத்து ஏற்படுகிறது.
முத்துக்குமரன், வில்லியனுார்.
கால்நடைகளால் இடையூறு
வில்லியனுார் மாட வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகள் திரிவதால் விபத்து ஏற்படுகிறது.
அய்யப்பன், வில்லியனுார்.
பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல்
புதுச்சேரி விழுப்புரம் செல்லும் தனியார் பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஜெயராஜ், பிள்ளையார்குப்பம்.
சிக்னலால் குழப்பம்
இந்திரா சிக்னலில் சிக்னல் விளக்குகள் பழுதாகிசரிவர எரியாததால், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.
காமராஜ், புதுச்சேரி.

