தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்


ADDED : ஜூலை 13, 2024 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: கடலுார் சாலையில் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சப் கலெக்டர் போலீசில் புகார் அளித்தார்.

புதுச்சேரியில் பகுதியில் அரசியல் உள்ளிட்ட பேனர்கள் வைக்கப்பட்டு வருவதால், வாகன விபத்து, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. நகரப்பகுதியில் முக்கிய இடங்களில் வைக்கப்படும் பேனர்களை நகராட்சியினர் அகற்றி வந்தாலும், பேனர்கள் வைக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடலுார் சாலை மரப்பாலம் முதல் நைனார்மண்டபம் வரை அரசியல் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. அதையடுத்து, நைனார்மண்டபம் பகுதியில் பேன்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் நேற்று முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us