/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி
/
அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி
அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி
அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி
ADDED : மே 12, 2024 04:44 AM
அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் துறைரீதியான விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டாலும், அவரே விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழும்போது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இதற்காக, தனியாக விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார். அவர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கை கவர்னரின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் விதிமுறைகளின்படி, 6 மாத காலத்திக்குள்ளாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
பல நேரங்களில் பல ஆண்டுகளாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் ஜவ்வாக இழுத்தடிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, லஞ்ச ஒழிப்புத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் துறைரீதியான விசாரணை அதிகாரி 6 மாதத்திற்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டால், அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாக கவனத்திற்கு வந்துள்ளது.
எனவே, துறைரீதியான விசாரணை நடத்தும் அதிகாரி பதவி உயர்வு அல்லது வேறு ஒரு காரணத்திற்கு இடமாற்றம் செய்யப்படாலும், அவரே விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
மேலும், ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு காலம் உள்ளவர்களை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டாம். ஒருவேளை விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யாமல் ஓய்வு பெற்றாலும், ஓய்வு பெற்ற பிறகும் அவரே விசாரணை அதிகாரியாக தொடர்வார் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.