/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய தொழிற்சாலை வர சலுகைகள் அறிவிக்க வேண்டும் - சிவா எம்.எல்.ஏ.,
/
புதிய தொழிற்சாலை வர சலுகைகள் அறிவிக்க வேண்டும் - சிவா எம்.எல்.ஏ.,
புதிய தொழிற்சாலை வர சலுகைகள் அறிவிக்க வேண்டும் - சிவா எம்.எல்.ஏ.,
புதிய தொழிற்சாலை வர சலுகைகள் அறிவிக்க வேண்டும் - சிவா எம்.எல்.ஏ.,
ADDED : ஆக 06, 2024 07:12 AM
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது;
புதுச்சேரியில் ஏற்கனவே 3 மதுபான ஆலைகள் உள்ளபோது, தற்போது புதிதாக 3 மதுபான ஆலை துவக்க ஏன் அனுமதி வழங்கப்பட்டது. யாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் இலவசம், ஜி.எஸ்.டி.,யில் சலுகை அளித்தால் மட்டுமே வருவர். அதுபோல் புதிதாக தொழில் கொள்கையை உருவாக்க வேண்டும்.
புதுச்சேரிக்கு வருமானம் ஈட்டி தந்த காரைக்கால் துறைமுகம், தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும் என அறிவித்து 1091 இடம் மட்டுமே நிரப்பபட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்த பெரு நிறுவனங்கள் எல்லையோர தமிழக பகுதிக்கு சென்றது குறித்து ஆய்வு செய்யுங்கள். வியாபாரம், தொழில் நிறுவனங்கள் மூலம் நிலையான வருவாய் கிடைக்கும்.
புதுச்சேரி அரசுக்கு எந்தவித இலக்கு இல்லை என்பதை கவர்னர் உரை தெளிவாக்குகிறது. பட்ஜெட் தொகையை உயர்த்த மத்திய அரசுடன் போராடுகிறோம். அப்படி கிடைத்த தொகையை முழுமையாக செலவு செய்வது கிடையாது. அதிகாரிகள் மெத்தனத்தால் கடந்த ஆண்டு ரூ. 786 கோடி செலவு செய்யவில்லை.
புதுச்சேரியில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான வருமான இடைவெளி என்பது மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது.
இது சரியான வளர்ச்சி இல்லை. ஏழ்மையை ஒழிக்கும் திட்டம் புதுச்சேரி அரசிடம் இல்லை.
பால் தட்டுப்பாட்டை ஒழிக்க ரூ. 10.37 கோடி செலவு செய்து 4149 மாடுகள் வாங்கினர். 2.5 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக இருக்க வேண்டும்.
ஆனால் 20 ஆயிரம் லிட்டர் குறைவதாக கணக்கு காண்பித்துள்ளனர். என பேசினார்.