/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு கண்டனம்
/
அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு கண்டனம்
ADDED : ஜூலை 01, 2024 06:40 AM
புதுச்சேரி : அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு என்.ஆர் காங்., மாநில சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெயஸ்ரீதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வரும் நிலையில் அங்காளன் எம்.எல்.ஏ., வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என, பேசியுள்ளார். இது கண்டிக்கத் தக்கது.
காங்.,குடன் கூட்டு சேர்ந்து ஆதாயம் பெரும் நோக்கத்தோடு முதல்வரின் மீது வீண் பழி சுமத்துவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
அவர், கடந்த 2008 முதல் 2010 வரை வீட்டு வசதி வாரியத்தில் தலைவர் பொறுப்பில் இருந்த போது முறைகேடாக நிலம் வாங்கிய விதத்தில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு, ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வருகிறது.
எதிர்காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிற்கும், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் ஈடுபட்டால், இவர் இதுவரையில் ஈடுபட்டுள்ள ஊழல்களின் விவரங்களை வெளியிடுவேன்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.