/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்கட்டண உயர்வை கண்டித்து வரும், 3ம் தேதி போராட்டம் காங்., தலைவர் வைத்திலிங்கம் அறிவிப்பு

ADDED : ஆக 31, 2024 02:21 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும், 3,ம் தேதி மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி ஆளும் பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி அரசு இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை காரணம் காட்டி, மின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
அப்போது பா.ஜ., என்.ஆர்.காங்., தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால், அமைச்சர் நமச்சிவாயம் மின் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து 2 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதே தேதியில் இருந்து, நிலுவையுடன் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கும் நோக்கில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கை விட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 3,ம் தேதி காலை 10:00 மணிக்கு உப்பளத்தில், மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, காங்., கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.