ADDED : மார் 26, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மதுபாட்டில்களை, கிருமாம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்து கலால் துறையில் ஒப்படைத்தனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, எல்லைப் பகுதிகளில் போலீசார் மற்றும் தேர்தல் துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முக வேல் தலைமையில் போலீசார் நேற்றிரவு கன்னியக்கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர், கையில் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார்.
போலீசார் அந்தப் பையை சோதனை செய்த போது அதில், 20 குவாட்டர் மது பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

