/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதிகளை மீறி விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல்
/
விதிகளை மீறி விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஏப் 13, 2024 04:45 AM

திருக்கனுார்: திருக்கனுாரில் விதிகளை மீறி விற்கப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறை பறக்கும் படையினர், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, சோம்பட்டு ஏரிக்கரை பகுதியில் போலீசார் வருவதை கண்ட அடையாளம் தெரியாத நபர், தான் வைத்திருந்த அட்டைப் பெட்டியை போட்டுவிட்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து, போலீசார் அட்டைப்பெட்டியை சோதனை செய்தபோது, அதில் 10 லிட்டர் மதிப்பிலான மதுபாட்டில்கள் இருந்தது.
அதனை பறிமுதல் செய்து, கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய நபரை தேடிவருகின்றனர்.

