/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., கட்சியை பலவீனப்படுத்தும் விஷக்கிருமிகள் துாக்கி வீசப்படுவர்; மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

ADDED : ஜூலை 29, 2024 04:58 AM
புதுச்சேரி : எதிர்க்கட்சியுடன் உறவு வைத்து கொண்டு, காங்., கட்சியை பலவீனப்படுத்தும் விஷக்கிருமிகள் துாக்கி எறியப்படுவர் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி மாணவர் காங்., நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், 'முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்றதில் இருந்து அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறார். அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆட்சியாளர்களால் புதுச்சேரி மாநில கலாசாரம் சீரழிந்துள்ளது. புதுச்சேரி மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.
கஞ்சா உட்பட போதை பொருட்களால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரெஸ்டோ பார்களால் மக்கள் நிம்மதியாக துாங்க முடியவில்லை. கல்வித்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஊழல். என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் உள்ள விரிசலை பயன்படுத்தி, காங்., கட்சியை பலப்படுத்த வேண்டும். இண்டியா கூட்டணியில் யார் இருந்தாலும், நமது கட்சியை பலப்படுத்த நிர்வாகிகள் செயல்பட வேண்டும். நமது கட்சியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிகளுடன் உறவு வைத்து, காங்., கட்சியை பலவீனப்படுத்தும் விஷக்கிருமிகள் விரைவில் துாக்கி எறியப்படுவார்கள்' என்றார்.