/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நேர்முக தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு வாழ்த்து
/
நேர்முக தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு வாழ்த்து
ADDED : செப் 14, 2024 06:17 AM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு வளாக நேர்முகத் தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு கல்லுாரி நிர்வாகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் துறை, சென்னை ஸ்ரீன்சாப்ட் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து வேலை வாய்ப்பு வளாக நேர்முகத் தேர்வை நடத்தியது.
இதில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, இயந்திரப் பொறியியல் துறை, கட்டமைப்பு பொறியியல் துறையைச் சேர்ந்த 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வருமானம் கொண்ட வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வில் தேர்வாகிய மாணவர்களை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இயக்குனர் வெங்கடாஜலபதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அகாடெமிக்ஸ் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை வேல்முருகன், வேலைவாய்ப்பு கைலாசம் உள்ளிட்ட பல்வேறு துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.