ADDED : ஜூலை 30, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, பள்ளி கல்வித்துறையின் வட்டம்–1, சார்பில் ‘மின்னணு உள்ளடக்கம்’ தலைப்பில் வீடியோ உருவாக்கும் போட்டி நடந்தது.
இப்போட்டியில், ஜீவானந்தபுரம், அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் ராஜேஷ், பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்றதுடன், வட்ட அளவில் வழிபாடு கூடத்தில் நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தும் நிகழ்விற்கான சிறப்பு விருதும் பெற்றார்.
இதையடுத்து, கல்வித்துறையின் விருது பெற்ற ஆசிரியர் ராஜேஷ்யை, பள்ளியின் பொறுப்பாசிரியர் ராஜ்குமார், ஆசிரியர்கள் கன்னியம்மா, தமிழ்மலர் ஆகியோர் பாராட்டினர்.
