தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொதுமக்கள் கூடும் இடங்களில் டிஜிட்டல் வேனில் காங்., பிரசாரம்

பொதுமக்கள் கூடும் இடங்களில் டிஜிட்டல் வேனில் காங்., பிரசாரம்

பொதுமக்கள் கூடும் இடங்களில் டிஜிட்டல் வேனில் காங்., பிரசாரம்


ADDED : மார் 23, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் டிஜிட்டல் வேனுடன் காங்., பிரசாரத்தில் களம் இறங்க திட்டமிட்டுள்ளது.

லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள காங்., கட்சி முழு வீச்சில் தயாராகி வருகிறது. அக்கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., மீண்டும் வெற்றிப் பெறும் வகையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றார்.

வேட்பாளரான வைத்திலிங்கம் தனியாகவும், கூட்டணி கட்சியின் தலைவர்கள் தனியாகவும் ஓட்டு சேகரிக்க ஈடுபட வேண்டும் என, காங்., கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் காங்., கட்சி, மக்கள் கூடும் இடங்களில் டிஜிட்டல் வேனை களம் இறக்கி பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

என்.ஆர் காங்., - பா.ஜ., ஆட்சியின் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதை கலாசாரம், விலைவாசி ஏற்றம், சிறுமியின் படுகொலை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை 2 நிமிடமாக ஓடும் குறும்படங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக காங்., கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் பணிகளை ஒப்படைத்து, குறும்படங்களை தயார் செய்து வருகின்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us