/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பிரதமர் மோடியை மாற்றினால் தான் தனியார் மயம் நிற்கும்' காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் சாடல்

ADDED : ஏப் 03, 2024 02:50 AM

புதுச்சேரி : லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் இந்திரா நகர் தொகுதி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், 'புதுச்சேரி என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் 70 ஆயிரம் பெண்களுக்கு உதவித் தொகையாக ரூ.1,000 வழங்குவோம் என, கூறிவிட்டு, 19 ஆயிரம் பேருக்குத் தான் வழங்கி உள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களை வீணாக்கி விட்டனர். மின்துறை விற்பனையை தொழிலாளர்கள் கோர்ட் சென்று நிறுத்தி வைத்துள்ளனர்.
பிரதமர் மோடியை மாற்றினால் தான் தனியார் மயம் நிற்கும். ராகுல்காந்தி பிரதமர் ஆனால் தான் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்கும். அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களின் சம்பளம் இருமடங்காக உயர்த்தப்படும்.
இலவச அரிசி திட்டத்தின்கீழ் குறைந்த அளவே பணம் வழங்கப்படுகிறது. ஆனால், வெளி மார்க்கெட்டில் அரிசி கிலோ ரூ.60க்கு விற்பனையாகிறது. மீதி தொகையை யார் தருவது' என்றார்.
பிரசாரத்தின்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சிவா எம்.எல்.ஏ., காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.