/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடையை திறப்பேன் என கூறும் முதல்வரிடம் சத்தியம் வாங்க வேண்டும் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பேச்சு

ADDED : ஏப் 07, 2024 04:46 AM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதியில் இண்டியா கூட்டணி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காட்டேரிகுப்பம் கடைவீதியில் அவர், பேசுகையில், இந்த ஆட்சியில் மகளிருக்கான 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படவில்லை. இலவச பஸ் பயணம் துவங்கப்படவில்லை.
வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இதை மாற்ற வேண்டும் என்றால் கை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்.
எங்களுக்கு ஒட்டளித்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் உதவி தொகை வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.
இத்தொகுதிக்கு பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பிரசாரத்திற்கு வந்தால் ரேஷன் கடையை திறந்து அரிசி போடுவோம் என, கூறுவார்.
அப்போது ரேஷன் கடையை நிச்சயம் திறப்பேன். திறந்தால் அரிசி போடுவேன்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பேன் என,அப்பா பைத்தியம் சாமி மீது சத்தியம் செய்ய வலியுறுத்த வேண்டும்.அமைச்சர் நமச்சிவாயத்திடம்மின்துறையை தனியாருக்கு விற்க மாட்டேன், மின் கட்டணத்தை உயர்த்த மாட்டேன் என, சத்தியம் செய்ய வலியுறுத்த வேண்டும்' என்றார்.
பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், தி.மு.க., துணை அமைப்பாளர் குமார், செந்தில்வேலன், காங்., வட்டார தலைவர் பரமசிவம், சுரேஷ், முத்துரங்கம்,செந்தில்குமார், ரகுபதி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.