/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., வெற்றிக்கு பணியாற்ற இ.கம்யூ., தீர்மானம்
/
காங்., வெற்றிக்கு பணியாற்ற இ.கம்யூ., தீர்மானம்
ADDED : மார் 31, 2024 04:59 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றிக்கு முழுமையாக பணியாற்றுவது என, இ.கம்யூ., தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
புதுச்சேரி இ.கம்யூ., மாநில குழு கூட்டம், மூத்த நிர்வாகி அபிேஷகம் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் சலீம் அரசியல் நிலை குறித்து பேசினார். புதுச்சேரி லோக்சபா தொகுதி, காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பங்கேற்று பேசினார்.
முன்னாள் அமைச்சர் விசுவநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள் செல்வம், தினேஷ் பொன்னய்யா, கலைநாதன், அந்தோணி, அமுதா, ராமமூர்த்தி, கீதநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 'இண்டியா' கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற முழுமையாக பணியாற்ற வேண்டும்,' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

