/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 24, 2025 04:33 AM

புதுச்சேரி : புதுச்சேரி காங்., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
காங்., ஆதிதிராவிடர் பிரிவு மாநில தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் பிரிவுக்கு புதிதாக துணை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள், வடக்கு மாவட்ட தலைவர்கள், தெற்கு மாவட்ட தலைவர்கள், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

