/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கும்பாபிேஷக விழாவில் காங்., நிர்வாகிகள் பங்கேற்பு
/
கும்பாபிேஷக விழாவில் காங்., நிர்வாகிகள் பங்கேற்பு
ADDED : ஆக 24, 2024 06:04 AM

புதுச்சேரி: முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று காலை நடந்தது.
தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மகா அபிஷேகம் நடந்தது.
விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சீனியர் துணை தலைவர் தேவதாஸ், காங்., கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில தலைவரும், ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளருமான மருதுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில், காங்., கட்சி நிர்வாகிகள் சண்முகம், செந்தில்குமரன், சித்தானந்தம், சுரேஷ், பரந்தாமன், ஆறுமுகம், ரவிச்சந்திரன், மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.