ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நீதி விசாரணை தேவை என காங்., வலியுறுத்தல்
ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நீதி விசாரணை தேவை என காங்., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 12, 2026 05:51 PM
புதுச்சேரி: ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்றம் மேற்பார்வையில், நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டு என காங்., தெரிவித்துள்ளது.
புதுச்சேரி காங்., தேசிய செய்தி தொடர்பாளர் அவனி பன்சால் கூறியதாவது:
பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., ராமர் கோவில் கட்டுவதற்கு ரத யாத்திரை மேற்கொண்டனர். ராமர் கோவில் கட்ட அனைவரிடமும் நன்கொடை வாங்கினர். 2.77 ஏக்கர் நிலம் சுப்ரீம் உத்தரவுப்படி ஒதுக்கப்பட்டது. இது தவிர இக்கோவில் கட்ட கூடுதல் இடமும் கையகப்படுத்தப்பட்டன. பிரதமரால் இக்கோவில், திறக்கப்பட்டது.
இக்கோவிலை நிர்வகிக்க ராமஜன்ம பூமி தீர்த்த ேஷத்ரா அறக்கட்டளை அமைக்கப்படும் என, பிரதமர் அறிவித்தார். இது தனியார் அறக்கட்டளை. தற்போது, ராமர் கோவிலில் பக்தர்கள் வழங்கப்படும் காணிக்கைகள் ரூ 113 கோடி வரை திருடப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு முறைகேடுகளை கண்டறிந்தது. ஆனால், அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத்ராய் தவறு நடக்கவில்லை என்றார். கீழ்மட்ட ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்., கட்சி ஐந்து கோரிகைகளை வைக்கிறது. பிரதமர் மோடியும், யோகி ஆதித்யநாத்தும் அறக்கட்டளை உறுப்பினர்கள் நியமனம் அதன் செயல்பாடுகளை விளக்க வேண்டும். உடனடியாக சம்பத் ராய், அனில்மிஸ்ரா, கோவிந்த் தேவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
கோவிலுக்கு வந்த காணிக்கைகள் குறித்து, தடவியில், தணிக்கை நடத்த வேண்டும். ராமஜென்மபூமி தீர்த்த ேஷத்தர அறக்கட்டைளை ரத்து செய்து, புதிய அறக்கட்டளையை அறிவிக்க வேண்டும்’ என்றார்.
பேட்டியின் போது, காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், வைத்தியநாதன் உடனிருந்தனர்.
