தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தோல்விக்கு பொறுப்பேற்று காங்., தலைவர் ராஜினாமா

தோல்விக்கு பொறுப்பேற்று காங்., தலைவர் ராஜினாமா

தோல்விக்கு பொறுப்பேற்று காங்., தலைவர் ராஜினாமா

1


ADDED : மே 07, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 09:52 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், காங்., தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில், இண்டி கூட்டணியில் காங்., தி.மு.க., கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் பெரும் இழுபறியும், குழப்பமும் ஏற்பட்டது. இது, தேர்தல் களத்தில் ஓட்டுகளை சிதறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.  21 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த காங்., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதற்கிடையில் வைத்திலிங்கம் எம்.பி., கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, எனது மாநில தலைவர் பதவியை துறக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us