ADDED : ஜூன் 24, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, காங்., மாநில செயலாளர் சரவணனை கட்சியில் இருந்து நீக்கம் செய்து மாநில தலைவர் வைத்திலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை: புதுச்சேரி பிரதேச காங்., கட்சியின், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் பேரில், கட்சிக்கு எதிரான நடவடிக்கை மற்றும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் காரணமாக, மாநில செயலாளரான புதுச்சேரி வேல்ராம்பட்டை சேர்ந்த சரவணன், இந்திய தேசிய காங்., கட்சியில் அவர் வகித்து வந்த அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் ஆறு ஆண்டுகளுக்கு உடனடியாக நீக்கப்படுகிறார்.
மேலும், அவருடன், கட்சிப் பொறுப்பாளர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
