/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., மாநில துணைதலைவர் அனந்தராமன் பிறந்த நாள் விழா
/
காங்., மாநில துணைதலைவர் அனந்தராமன் பிறந்த நாள் விழா
காங்., மாநில துணைதலைவர் அனந்தராமன் பிறந்த நாள் விழா
காங்., மாநில துணைதலைவர் அனந்தராமன் பிறந்த நாள் விழா
ADDED : மார் 13, 2025 06:42 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., துணை தலைவர் அனந்தராமன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் விழாவையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் அவரது ஆதரவாளர்கள் தங்கத்தேர் இழுத்தனர். தொடர்ந்து தொகுதி முழுதும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின் அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினார். விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, எம்.எல்.ஏ.,க்கள்., வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், மாநில செயலாளர்கள் பாலு (எ) பாலச்சந்தர், ரகுபதி, பாலமுரளி, செந்தில், ஜெயராமன், சுரேஷ், தொழிலதிபர் சரவணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.