/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொகுதி வளர்ச்சிப் பணிகள்: எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
/
தொகுதி வளர்ச்சிப் பணிகள்: எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
தொகுதி வளர்ச்சிப் பணிகள்: எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
தொகுதி வளர்ச்சிப் பணிகள்: எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
ADDED : செப் 06, 2024 04:20 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை மூலம் வில்லியனுார் தொகுதியில் நடக்கும், வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமை தாங்கினார். தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர்கள் சுந்தர்ராஜன், ராதாகிருஷ்ணன், சந்திரகுமார், சுந்தரமூர்த்தி, உதவிப் பொறியாளர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வில்லியனுார் தொகுதியில் நடக்கும் கொம்பாக்கம் - செட்டிக்களம் சாலை, சுடுகாடு சாலை, சிவகிரி நகர் ஆகிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்கவும், மார்க்கெட் கட்டுமான பணியை இந்தாண்டு துவங்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
அதேபோல, ஏ.எப்.டி., கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சுல்தான்பேட்டை, சுந்தரமூர்த்தி விநாயகபுரம், உத்திரவாகினிப்பேட், வினித் நகர் ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை துரிதமாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
வில்லியனுார் மாதா கோவில் வீதி மற்றும் மார்க்கெட் வீதியின் இருபுறமும் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய தார் சாலை அமைத்தல், மூர்த்தி நகர், பாண்டியன் நகர், பத்மினி நகர், சுல்தான்பேட்டை முகமதியா நகர் உள்ளிட்ட, 8 வீதிகளில் புதிய சாலைகள் அமைக்க திட்டப் பணிகள் தயாரித்து நிதி ஒப்புதல் பெறுதல் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.