தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம்

சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம்

சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம்


ADDED : ஜூன் 24, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு டி.ஜ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, பேசுகையில், ‘தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது. போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும், முக்கிய சந்திப்புகளின் போக்குவரத்து போலீசார் இரு வேளைகளில் பணியில் இருக்க வேண்டும்.  போதைப் பொருட்களை தடுப்பது, பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், திவ்யா, எஸ்.பி.,க்கள் வம்சிதர ரெட்டி, ரச்சனா சிங், பக்தவச்சலம், கோதண்டராமன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us