/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்கனுாரில் நுகர்வோர் தின விழா
/
திருக்கனுாரில் நுகர்வோர் தின விழா
ADDED : மார் 22, 2024 05:44 AM

திருக்கனுார் : திருக்கனுார் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் உலக நுகர்வோர் தின விழா நடந்தது.
சங்கத் தலைவர் முத்துரங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட நுகர்வோர் பூசல்கள் குறை தீர்ப்பு ஆணைய தலைவர் நீதிபதி முத்துவேல், ஆணைய உறுப்பினர் சுவிதா, புதுச்சேரி சமுதாயக் கல்லுாரி தமிழ்துறை பேராசிரியர் அரங்க முருகையன் ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து பேசினர்.
விழாவில், நுகர்வோர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு கவுரவ தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் திலகவதி, ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், இணை பொதுச் செயலாளர் சந்திரகுமார், செய்தி தொடர்பாளர் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்க பொதுச் செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

