/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூழல்தான் வெற்றியை தீர்மானிக்கிறது கல்வியாளர் புகழேந்தி பேச்சு
/
சூழல்தான் வெற்றியை தீர்மானிக்கிறது கல்வியாளர் புகழேந்தி பேச்சு
சூழல்தான் வெற்றியை தீர்மானிக்கிறது கல்வியாளர் புகழேந்தி பேச்சு
சூழல்தான் வெற்றியை தீர்மானிக்கிறது கல்வியாளர் புகழேந்தி பேச்சு
ADDED : ஏப் 01, 2024 05:17 AM

புதுச்சேரி; ''வாழ்க்கையை சிம்பிளாக வைத்துக்கொள்ள வேண்டும்'' என கல்வியாளர் புகழேந்தி பேசினார்.
தினமலர் வழிகாட்டி கண்காட்சியில் 'உங்களாலும் வெற்றிபெற முடியும்' என்ற தலைப்பில் கல்வியாளர் புகழேந்தி பேசியதாவது:
இன்றைய தலைமுறையினருக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகள் கண்முன் உள்ளன. இதுவரை பெற்றோரின் அரவணைப்பில் இருந்த பிள்ளைகளுக்கு அடுத்து 15 ஆண்டுகள் மிக முக்கியமானது. உயர்கல்வி நோக்கி பிள்ளைகள் செல்ல வேண்டும்.
படிப்பு இருக்கட்டும், ஒரு குடும்பமாக சந்தோஷமாக இருந்தோமா என எண்ணிப் பார்க்க வேண்டும். வாழ்க்கையில் ஜெயிப்பது, தோற்பது என ஒன்றும் கிடையாது. நாம் நினைத்த இடத்திற்கு போகவேண்டும் என சிம்பிளாக வாழ்க்கையை வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் வாழ்க்கையில் 25 சதவீத பங்களிப்பு தான் நம்முடையது. மீதி 75 சதவீதம் அவர்களுக்கு பிடித்தமாதிரி வாழ வேண்டி இருக்கும். எந்த மனிதன் ஜெயிக்கிறான் என்பதை அந்த சூழல்தான் முடிவு செய்யும். பெற்றோர் பின்புலம் இன்றி, வாழ்வில் பலரும் ஜெயித்துள்ளனர்.
குடும்பத்திற்காக காலையில் துவங்கி இரவு வரை உழைப்பவனும் வாழ்க்கையில் ஜெயித்தவன் தான். 25 ஆண்டுகளாக தான் செய்யும் தொழில் துறையை நேசித்து உண்மையாக நேர்மையாக உழைக்கிறவனும் வாழ்வில் ஜெயித்தவன் தான்.
எனவே, குடும்பம், நாம் சார்ந்துள்ள தொழில், சமுகம் என இவற்றில் ஏதேனும் ஒரு பொறுப்பினை எடுத்து முன்னேறுங்கள்.
குடும்பத்திற்காக உழைத்து உழைத்து பெற்றோர் ஓடாய் தேய்ந்து போய் இருப்பர். நீங்கள் நன்றாக படித்து முடித்த பிறகு, நான் பார்த்துகொள்கிறேன். நீங்கள் ஓய்வு எடுங்கள் என சொல்லி பாருங்கள். அந்த சந்தோஷமே வேறு.
இவ்வாறு அவர் கூறினார்.

