/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறப்பு முகாம்களில் தொடர்ந்து குவியும் கூட்டம்; சான்றிதழ்களை விரைந்து வழங்க கோரிக்கை

ADDED : மே 23, 2024 12:15 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நடக்கும் சிறப்பு முகாம்களில், சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை, விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடர, சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை பெறுவதற்கான, சிறப்பு முகாம்கள், தாலுகா வாரியாக நடந்து வருகின்றன.
தாலுகா அலுவலகங்களில், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், உரிய நேரத்தில் சிரமம் இன்றி, சான்றிதழ்களை பெறவும், இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முகாமில் உரிய ஆவணங்களுடன், விண்ணப்பித்து தேவையான சாதி மற்றும் இருப்பிட சான்றிதழை, பெற்றுக்கொள்ளலாம். இதை மாணவர்களும், பெற்றோர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, புதுச்சேரி, வில்லியனுார், பாகூர், உழவர்கரை உள்ளிட்ட தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன.
இந்த முகாம்களில் ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்று, சான்றிதழ்களுக்கு தேவையான நகல்களை கொடுத்து விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், விண்ணப்பித்த மாணவர்களில், சிலருக்கு மட்டுமே, உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
பெரும்பாலானோருக்கு, சான்றிதழ்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.