/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்: பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை
/
கூட்டுறவு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்: பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை
கூட்டுறவு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்: பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை
கூட்டுறவு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்: பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : செப் 10, 2024 06:48 AM
புதுச்சேரி : ஆசிரியர் கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டி தேர்தலை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என புதுச்சேரி பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் பொது செயலாளர் நாராயணன் கூட்டுறவு பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி ஆசிரியர் கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டி-495க்கான தேர்தல் வரும் 22ம் தேதி முதலியார்பேட்டை ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் இயக்குனரகம் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை காரைக்காலில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்த போட்டியை நடத்த நான்கு பிராந்தியங்களில் இருந்து 42 உடற்கல்வி ஆசிரியர்கள் அலுவல் பணியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 48 உடற் கல்வி ஆசிரியர்களும் 24 மணி நேரமும் மாணவர்களுடன் உறுதுணையாக இருக்க உள்ளனர்.
எனவே 90 உடற் கல்வி ஆசிரியர்கள் அன்றைய தேதியில் காரைக்காலில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதனால், இவர்கள் தேர்தலில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டி-495க்கான தேர்தலை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.