/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை மின் நிலையத்தில் ரூ.2 லட்சம் காப்பர் கம்பி திருட்டு
/
துணை மின் நிலையத்தில் ரூ.2 லட்சம் காப்பர் கம்பி திருட்டு
துணை மின் நிலையத்தில் ரூ.2 லட்சம் காப்பர் கம்பி திருட்டு
துணை மின் நிலையத்தில் ரூ.2 லட்சம் காப்பர் கம்பி திருட்டு
ADDED : பிப் 28, 2025 04:37 AM
வில்லியனுார்: துணை மின் நிலையத்தில் காப்பர் கம்பி திருடுபோனது.
கரிக்கலாம்பாக்கம் அடுத்த கோர்க்காடு கிராமத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கு கடந்த 23ம் தேதி காலை பணிக்கு வந்த ஊழியர்கள் சதீஷ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் துணை மின்நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது மின்நிலையத்தில் வைத்திருந்த காப்பர் மின் கம்பிகள் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து மின் நிலைய உதவி பொறியளர் முகமது இஸ்மாயிலுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி பொறியாளர் ஆய்வு செய்தபோது ரூ.1.96 லட்சம் மதிப்பிலான 225 கிலோ எடை கொண்ட காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
கரிக்கலாம்பாக்கம் உதவி பொறியாளர் புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.